நான் ஏன் இப்படி இருக்கின்றேன் என்று தெரியவில்லை. எனக்கும் கலாமுக்கும் என்ன வாய்க்கால் தகராறா இல்லை வரப்பு தகராறா பிறகு ஏன் இப்படி எழுதுகிறேன். இதை எழுதக்கூடாது என்றே நினைத்திருந்தேன். ஆனால் அதிஷா அண்ணனின் ஸ்டேடஸ் பார்த்ததும் எழுதினால் என்ன என்று தோன்றியது. அதில் ஒருவருடைய கமென்டை பார்த்ததும் எழுதுடா பரிதி என்று வீறு கொண்டு எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
ஏற்கனவே கலாம் பற்றி ஒரு பெரும் விவாதம் நடந்தது. 250 கமென்ட்களை தாண்டி போய்க் கொண்டிருந்தது விவாதம்.சரி மேட்டருக்கு வருகிறேன். இந்த வார விகடனில் கலாமை சில தோழர்கள் சந்தித்துள்ளார்கள். அனைவருமே ஏதாவது ஒரு மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என விரும்பும் இளைஞர்கள். அவர்களுடனான உரையாடலின் போது ஒரு மாணவர் சொல்கிறார். நம் நாடு ராணுவத்துக்கு அதிகமாக செலவிடுகிறது. அதில் பாதியை மற்ற துறைக்கு திருப்பி விடலாம் என்கிறார். உடனே கலாம் நோ நோ 10 % குறைவான பணம் தான் நாம் பயன்படுத்துகிறோம் என்று சொல்கிறார். நான் 5 வருடங்களுக்கு முன் ஜவகர் எழுதிய கம்யூனிஸம் நேற்று இன்று நாளை புத்தகத்தைப் படித்தேன் அதில் அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து இந்தியா போன்ற நாடுகளில் இருந்து ராணுவத்திற்கு செலவிடும் பணத்தில் 20% க்கும் குறைவான பணம் இருந்தாலே பசி என்பதை உலகத்தில் இருந்து நீக்கிவிடலாம் என்று படித்த நினைவு.அவர் அந்த நூலை 2000ல் எழுதினார் என்று நினைக்கிறேன்.அப்போதே அவ்வளவு செலவு செய்தோம் என்றால் இப்போது கண்டிப்பாக அதை விட அதிகமாக செலவிடுவோம் என்றே தோன்றுகிறது. சரியாக யோசிப்பவர்களையும் கலாம் மாற்றிவிடுகிறார்.
இன்னொருவர் 26 % இந்தியர்கள் பட்டினியாய் இருக்கிறார்கள் மறுபக்கம் உணவு தானியங்களை அரசு வீணடித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி கேட்கிறார்.
அனைத்தையும் இலவசமாக கொடுத்தால் மக்களுக்கு அதன் மகத்துவம் தெரியாது என்கிறார். மேலும் சீரான வழங்குதல் முறையை பின்பற்ற வேண்டும் என்கிறார். அது என்ன சீரான வழங்குதல் என்பதை சொல்ல வில்லை. எனக்கு என்னவோ மக்களுக்கு உணவின் மகத்துவத்தை சொல்லிக் கொடுப்பதை விட உணவு கொடுப்பது தான் சிறந்ததாகத் தோன்றுகிறது. உயிர் வாழ்வது என்பது உணவின் மகத்துவத்தை விட முக்கியம் என்று கருதுகிறேன். பசித்தவனுக்கு முதலில் மீன் கொடு அப்போது தான் மீன் பிடிக்க கற்றுக்கொள்வதர்கான தெம்பு இருக்கும் என்பது என் கருத்து.
கலாமிடம் ஒரு பெரும் இளைஞர் சக்தி உண்டு. அதை சரியாக பயன்படுத்தலாம் என்ற நோக்கில் நீங்கள் கட்சி ஆரம்பிக்கலாமே என்கிறார் ஒருவர். நான் ஏற்கனவே ஆரம்பிச்சுட்டேனே மாணவர் கட்சி என்கிறார். இதுக்கு ரஜினியே தேவலாம் போல. இந்த மாதிரி பேச்சுக்கள் எல்லாம் கைதட்டு வாங்குவதற்காக பேசுவது. அவர் சீரியஸாக அப்படி சொல்கிறார் என்றால் அதை வைத்து இது வரை என்ன செய்திருகிறார் என்று தெரியவில்லை.
கடைசியாக ஒன்று. ஸ்பெக்ட்ரம் கருப்புப் பணம் போன்றவை இருந்தால் எப்படி நாம் உருப்படமுடியும் என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் சொல்லும் பதில் உங்களால் தான் ஊழலை ஒழிக்கமுடியும் என்கிறார். அவர் சொல்லுவது சரிதான் இளைஞர்கள் வேலைக்கு போகும் போது லஞ்சம் வாங்காமல் இருந்தால் ஒழியும். ஆனால் அவர்களால் ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் என்ன பண்ண முடியும். நாடாளுமன்ற கூட்டுக் குழுவை கூட்ட சொல்லி பெரும் தேசியக்கட்சிகள் கத்தியும் ஒன்றும் முடியவில்லை. 10வது 12 வது படிக்கும் சிறுவர்களைப் பார்த்து உங்களால் முடியும் என்கிறார். பிறகு 1 வது ரைம்ஸ் போல் ஒன்றை சொல்லி திருப்ப சொல்ல சொல்கிறார்.
கலாம் ஒரு பச்சையான முதலாளித்துவவாதி.அவரால் மாற்றம் வரும் என்று நினைப்பவர்கள் பெரிய முட்டாள்கள் என்பது என் கருத்து. என்னை பொருத்தவரையில் எல்லா தலைவர்களும் மக்கள் எழுந்து நடக்கவே கூடாது என்று நினைக்கிறார்கள். இவர் நடக்கலாம் ஆனால் ஒரே இடத்தில் என்கிறார். அதற்காக இவரை தலைவராய் ஏற்றுக் கொள்ள முடியாது. எனக்கு சந்தேகம் 2020ல் வல்லரசு என பேசுவதை வைத்து இவர் மக்களை மட்டும் ஏமாற்றுகிறாரா? இல்லை இவரும் ஏமாறுகிறாரா என்பது தான்.
நண்பேன்டா....
நண்பேன்டா....
உங்களுக்கு நண்பன் இருந்தா இது மிகவும் பிடிக்கும்...
Wednesday, December 29, 2010
Wednesday, November 24, 2010
மன்மதன் அம்பு படத்தின் கதை
மன்மதன் அம்பு, கமலும் மாதவனும் அன்பே சிவம் படத்திற்கு பிறகு இணைந்து நடித்துள்ளபடம். ரெட் ஜேயின்ட் மூவிஸ் தயாரிப்பு. இந்த படத்தின் கதை என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து எனக்கு கிடைத்த தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
இந்தியாவின் முக்கியமான தொழிலதிபரான மாதவன் தன் கல்லூரி தோழியான திரிஷாவை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். புது மணத்தம்பதிகளுக்கு பரிசாக உலகம் முழுக்க சுற்றி வரும் ஒரு கப்பலில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. அதே கப்பலில் கனடாவில் வசித்து வரும் டிடேக்டிவான கமலும் அவரது மனைவியான வெளிநாட்டுப் பெண்ணும் பயணம் செய்கிறார்கள். இரண்டு தம்பதிகளும் பரஸ்பரம் பழக்கமாகிறார்கள்.நன்றாக போய் கொண்டிருக்கும் திருமணவாழ்க்கையில் திரிஷாவின் சில நடவடிக்கைகள் புரியாத புதிராக இருக்கிறது. இதற்கிடையில் திரிஷா கப்பலிலேயே காணாமல் போகிறார். கமலின் உதவியய் நாடுகிறார் மாதவன். கமலின் தலையீடு அறிந்த கடத்தல் கும்பல் கமலையும் அவரது மனைவியையும் தாக்குகிறார்கள். அதில் கமலின் மனைவி இறந்து விடுகிறார். பிறகு கமலின் பழிவாங்களும் திரிஷாவை மீட்பதும் தான் மீதி கதை.
இந்த படத்தில் விவாகரத்தான பெண்ணாக வரும் சங்கீதா ஒரு பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறாராம். வெறும் மியூசிக் மட்டும் வரும் அந்த பாட்டில் பழைய கமலை பார்க்கலாம் என்று படவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எப்பொதும் தனது படத்தில் ஒரு காட்சிக்கு வரும் கே.எஸ். ரவிக்குமார் இந்த படத்திலும் ஒரு காட்சிக்கு வருகிறார் ஆனால் அந்த வேடம் தான் படத்தின் மொத்த கதையையும் மாற்றுகிறதாம்
பின்குறிப்பு: இந்த மாதிரி யாராவது கதை சொல்லிகிட்டு அவங்க பிளாக் traffica ஏத்த பார்ப்பாங்க விட்டுடாதிங்க...
நண்பேன்டா....
Wednesday, November 17, 2010
ஒரு ஒழுக்கமான மாணவனின் ஓட்டை ப்ளாஸ்பேக்
நான் ஒரு ஒழுக்கமான மாணவன். பிட்டு அடிப்பது, பார்த்து எழுதுவது, கேட்டு எழுதுவது போன்றவை குற்றம் என்று எனது எல்.கே.ஜி. டீச்சர் உஷா மேம் சொன்னதை நான் தீவிரமாக இரண்டு வருடம் கடைபிடித்தேன். அந்த மெட்ரிகுலேசன் பள்ளியை விட்டு ஒன்னாவது பாரதிதேவி ஆரம்பபள்ளி தமிழ் மீடியத்தில் 6 மாசம் படித்த போதும் நான் அதை மீற வில்லை. அந்த பள்ளி பிடிக்கவில்லை என்று பாட்டியிடம் சொல்லி தேனியிலேயே இருக்கின்ற பெரிய ஸ்கூலாய்ப் பார்த்து அரைப்பரிட்சையின் போது சேர்ந்தேன்.அதற்கு என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுத நேர்ந்தது அதில் புத்தகம் பக்கத்தில் இருந்தும் எனக்கு எந்த கேள்வி தெரியாவிட்டாலும் நான் பார்த்து எழுதவில்லை.
அன்று spelling test. நடுவில் தமிழ்மீடியம் சேர்ந்து படித்ததால் நான் ஆங்கிலத்தில் மிகவும் சுமாரான மாணவனாய் இருந்தேன். அன்று தான் முதல் முதலாய் பார்த்து எழுதினேன்(காரணம் அதற்கு முன் பரிட்சையில் 24வது ரேங்க் வந்திருந்தேன் அது எனக்கு பெரும் அவமானமாய் இருந்தது denக்கு spelling தெரியாததால் எல்லொரும் என்னை கிண்டல் பண்ணி ஒரு பட்டப்பெயர் வைத்திருந்தார்கள்) .doctor என்ற சொல்லுக்கு ஸ்பெல்லிங்க் தெரியாமல் எனக்கு முன் பெஞ்சில் அமர்ந்திருக்கும் சன்முகப்பிரியாவின் பேப்பரை பார்த்து எழுதி மன்னிக்க முடியாத பாவத்தை செய்தேன்.அவளும் தப்பாய் எழுதி மார்க் போனாலும் அது தான் நான் முதன்முதலில் பார்த்து எழுதியது.
இரண்டாவது படிக்கும்பொழுது நான் எழுதிய கவிதை சிறுவர்மணியில் வந்த பின்பு ஒரு ஹீரோவாக பள்ளியில் வலம் வந்தேன்.அதனால் எந்த டீச்சரும் என் மேல் சந்தேகப்படவில்லை.ருசி கண்ட பூனையாக நான் அப்போ அப்போ ஓரிரு வார்த்தைகள், கேள்விகள் என்று கேட்டு எழுதிக் கொண்டிருந்தேன்.ஆனால் ஏனோ தெரியவில்லை நான் நான்காவது ஐந்தாவது பார்த்து எழுதவேயில்லை. பின்பு ஆறாவதில் படிக்கக் கஷ்டமாக இருந்ததால் 5 பேர் கொண்ட குழு அமைத்து ஆளுக்கொரு கேள்வி படித்துவந்து எங்கள் டீச்சர் சொல்லிக் கொடுக்காத ஷேரிங்க் பண்ணுவோம். நாங்கள் ஐவரும் முதல் 10 ரேங்க் மாணவர்கள் என்பதால் எந்த டீச்சரும் எங்களை கூர்ந்து பார்க்கவில்லை பார்த்தாலும் எங்கள் ஐவர் படையின் கூட்டணியை யாராலும் கண்டுபிடிக்கமுடியாது.ஆனால் வினோதினி என்ற பெண்ணால் எங்கள் கிளாஸ் டீச்சரிடமே மாட்டி அவமானப்பட்டோம். அதற்கு பிறகு படை அமைத்து பண்ணுவதை விட்டுவிட்டு சின்னபுள்ள தனமாக one word மட்டும் கேட்டு எழுத ஆரம்பித்தேன்.
எங்கள் பள்ளியில் 8 வது வரை ஹிந்தி கண்டிப்பாக படிக்கவேண்டும். ஹிந்தியில் "மத்தியமா" என்ற பரிட்சைவரை எழுதவேண்டும். அதில் மிக நல்ல மார்க் வாங்கிய பசங்களை மட்டும் அடுத்த கட்டப் பரிட்சையான "ராஸ்ட்ரபாஸா" எழுதவைக்க முடிவுசெய்தனர். ஏதோ தப்பித்தவரி நானும் அந்த லிஸ்டில் வந்ததால் நானும் எழுதவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டேன். எனக்கு ஹிந்தி எதிர்ப்பு போரட்டம் பற்றி எதுவும் தெரியாது என்றாலும் நான் அதை வன்மையாக எதிர்த்தேன்.ஆனால் மேடமிடம் சொல்லும் அளவுக்கு தைரியமில்லை ( நல்ல பையன் இமேஜ் போய்விடுமோ என்ற பயம்).ஆனாலும் பால் பேட்மிடன் பிளேயர் என்று நானும் என் நண்பன் இராமகார்த்திக்கும் ஓடிவிடுவோம். எங்களுக்கு அதில் ஒரு பாடம் கூட தெரியாது.கடைசி நேரத்தில் ஏதோ அச்சுபிச்சு படித்துவிட்டு நாங்கள் பரிட்சைக்குப் போனோம்."ராஸ்ட்ரபாஸா" இரண்டு பரிட்சைக்களாக வைக்கப்படும் ஒன்று காலையில் மற்றொன்று மதியம் எங்கள் டீச்சர் பரிட்சைக்குப் போகும் முன் சொன்னார்.
"நீங்க எப்படியும் பாஸாக மாட்டீர்கள் அதனால் பிட்டு எடுத்து போங்கள்" என்றார்.எங்களிருவரை மட்டும்மல்ல எல்லொரையும் தான். ஆனால் நாங்கள் இருவரும் பிட் எடுக்காமலே போய் எழுத்திவிட்டு வந்தோம் ஏனென்றால் நாங்கள் நல்லவர்கள் என்று எங்கள் க்ரஷ்களுக்குக் காண்பித்துக் கொள்ள நினைத்தோம். பரிட்சையில் என் கிரஷ் என் பேப்பரை பார்த்து "தோகே" (திருக்குறள் மாதிரி இருவரி இருக்கும் கவிதை) எழுத அந்த சந்தோஷத்தில் நான் என்ன எழுதினேன் என்றே தெரியவில்லை தாறுமாறாக கண்டதையும் எழுதிவிட்டு வந்தேன்.ஆனால் எங்கள் கிரஷ்களே காலையில் பிட் எடுத்து சென்றதை அறிந்ததால் மதியம் நாங்களும் பிட் எடுத்துச் செல்ல துணிந்தோம். எல்லா பிட்டையும் ஒருவரே எடுத்துச் செல்லாமல் பக்கத்தில் இருப்பவர்களுடன் ஷேர் பண்ணிக்கச் சொல்லி டீச்சரே சொன்னார்.என் பக்கத்தில் என் கிரஷ் என்பதால் நானும் அவளும் பிட்டை ஷேர் பண்ணப்போகிறோம் என்கிற சந்தோஷத்தில் நிரையபிட்டுகளை அவளிடம் கொடுத்துவைத்தேன் (அப்ப தான அடிக்கடி கூப்பிட்டுக் கேட்க முடியும்). ஆனால் என் நேரம் என் கிரஷ், இராமக்கார்த்திக், அவனுடைய கிரஷ் எல்லொருமே வேர ஹாலாகிப் போனார்கள். என் பக்கத்தில் ரூல்ஸ் ராமானுஜம் உட்கார்ந்து இருந்தான்.ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளியின் ரூல்ஸை மதிக்காத ஒருத்தன் இருப்பான். எதையுமே மதிக்காமல் எல்லாவற்றையும் மதிப்பவன் போலவே ஒருவன் இருப்பான் (என்னை போல்). எல்லாவற்றையும் மதிப்பவன் ஒருத்தன் இருப்பான். அப்படி ஒருத்தன் தான் அந்த ரூல்ஸ் ராமானுஜம். அவன் பக்கத்தில் உட்கார்ந்ததைப் பார்த்து நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.சரி சமாளிப்போம் என்று நான் எடுத்துச் சென்ற பிட்டை எடுக்கலாம் என்று பார்த்தால் என் ஹாலில் ஒரு பெண் பிட்டைப் பார்த்து எழுதும்போது மாட்டிக்கொண்டாள். அதைப் பார்த்து இன்னொருவனுக்கு கால் நடுங்கி ஸாக்ஸில் இருந்த பிட் எல்லாம் விழுந்து அது பறந்து சூப்பிரவைசரிடம் சிக்கி பெரிய பிரச்சனையாகிவிட்டது.அதற்கு மேலும் எனக்கு பிட் எடுப்பதற்கு தைரியம் இல்லை.ஒரு கேள்வி கூடத்தெரியாமல் உட்கார்ந்திருந்தேன் இவ்வளவுக்கும் நடுவே எனக்குமுன் அமர்ந்திருந்த பெண் பேர் பாக்கிய ஸ்ரீயா? இல்லை ஆஷாவா? என்று தெரியவில்லை. அவள் கொஞ்சம் கூட பயப்படாமல் பிட் அடித்துக்கொண்டிருந்தாள் அவள் அடித்த வேகத்தைப் பார்த்தால் ஏழெட்டு பிட்டுகள் ஓடியுருக்கும் போல் தெரிந்தது.அவளைப் பார்த்து பாஸ் ஆகிறவரிக்கும் எழுதிவிட்டு ரூல்ஸ் ராமானுஜத்திடம் என் பேப்பரைக் கொடுத்தேன்.
"இது எல்லாம் ரொம்ப தப்புடா" என்றான்.அப்படியே அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தேன்.அவன் ஏதேதோ எழுதினான்.பரிட்சை முடிந்து வெளியே வந்ததும் எல்லோரும் தங்களின் பிட்டு பிரதாபங்களைச் சொல்லிக்கொண்டிருந்தோம்.
பரிட்சை முடிவுகள் நல்ல படியாகவே வந்தது. நான் first class ல் பாஸ் பண்ணினேன்.கிட்டத்தட்ட எல்லோரும் அப்படித் தான். ரூல்ஸ் மட்டும் செகெண்ட் கிளாஸில் பாஸாணான். அவனுக்கு மானசிகமான் இரசிகனானேன். ஒருவேளை இது தமிழ் சினிமாவாகவும் நான் கதாநாயகியாகவும் இருந்திருந்தால் அவன் மேல் காதல் கொண்டிருப்பேன்.ஆனால் அந்த முடிவுகள் அவனையும் பிட் அடிக்கவைக்க ஆரம்பித்தன.எனக்கு இன்னும் அதை நினைத்தால் ஏதோ செய்யும்.
(இந்த பதிவை நான் இப்பொழுது எழுதுவதற்கு காரணம் நான் கல்லுரி வந்தபின்பு பார்த்து எழுதேவே இல்லை, ஏன் என்று தெரியவில்லை ஒருவேளை அவனை மாதிரி நானும் மாறி இருக்கலாம்.இல்லை அரியர் தாங்குவதற்கான சக்தி வந்திருக்கலாம்.)

Friday, October 15, 2010
நானும் என் தோழனும்
நான் ஒரு வெட்டிப்பயல்.. அவன் ஒரு சோம்பேரி..நான் ஒரு முட்டாள்... அவன் ஒரு கிறுக்கன்... அவனொரு டோமரு.. நான் ஒரு பட்பலாங்கி...இதனாலே நாங்கள் நண்பர்களாகி விட்டோம்...
எங்களது வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு நடந்தது என்னவோ சாதாரணமாகத் தான்..என் கல்லூரியில் எனக்கு பின் பெஞ்சில் அமர்ந்திருப்பவன் என்பதைத் தவிர எனக்கும் அவனுக்கும் வேறு ஒரு சம்மந்தமும் இல்லை....என் ரூம்மெட்டின் அருகில் அமர்ந்திருப்பவன் என்பதால் அவனை பற்றி செவி வழிச் செய்திகள் மட்டும் தினமும் கேட்டுக்கொண்டே இருந்தேன்.அவனொரு குடிகாரன், பெண்பித்தன், கஞ்சாகுடிக்கி.. என்று பலவாறு அவனைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.அவன் கடவுள் மறுப்பாளன் என்பதால் அவனது எல்லா கெட்டப்பழக்கத்தையும் தாண்டி அவனைப் பிடித்தது(நான் ஒரு டிடோட்டலர் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்). ஆனாலும் அவனோடு பேசியதில்லை.அவன் ஒழுங்காய் கல்லூரிக்கு வருவதில்லை. கல்லூரிக்கு வருவதாகச் சொல்லிவிட்டு படத்திற்கு போய்விடுவான் என்று நண்பன் சொன்னான்.
ஆனால் எதுவுமே உண்மையில்லை என்பது அவனுடன் பழக்கம் ஏற்பட்ட சில நாட்களிலேயே தெரிந்து விட்டது. தன்னை ஒரு டெரராகக் காட்டிக் கொள்வதற்காக எல்லாம் அவன் போட்ட பிட்டுகள்.பயல் ஒரு வெத்து சோறு...ஒரு கட்டிங்க் என்றால் என்னனே தெரியாத அப்பாவி..ஒரு நாள் என் கல்லூரி தோழி ஒருத்தியின் புத்தகம் ஒன்றை எடுத்துப் பார்த்தேன்.அப்போது அவள் அங்கே இல்லை என்பதால் நான் எடுத்ததை அவள் அறியவில்லை.அவள் தேடப் போகிறாளே என்று இவனிடம் அந்தப் புத்தகத்தைக் கொடுக்குமாறு சொல்லிவிட்டு வேறு வேலையாய் சென்று விட்டேன்(I AM ALWAYS BUSY).
அரை மணிநேரம் கழித்து வந்தேன் அந்த தோழி ஏதொ மும்முரமாகத் தேடிக் கொண்டிருந்தாள்.பயல் சற்றுத் தள்ளி அவளையே பார்த்து நின்றுகொண்டிருந்தான் கையில் நான் கொடுத்த புத்தகம், எனக்கு விளங்கி விட்டது.அந்த பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டு
"நான் தான் எடுத்தேன் பயலிடம் கொடுக்கச் சொல்லிக் கொடுத்தேன் பாவம் மறந்து விட்டான் போல இருக்கு" என்றேன்.
அதற்கு அவள் "நான் அவனிடம் கேட்டதற்கு தெரியாது என்று தலை ஆட்டினான்" என்றாள்.
"தெரியும்னு ஆட்டனும்னு தான் நினைச்சேன் ஆனா அந்த பொண்ணு திடீர்னு கேட்ட பதட்டத்தில மண்டய மாத்தி ஆட்டிடேன்டா.."என்றான். இவனை எல்லாம் டெரரர்னு எஃபெக்ட் கொடுத்த என் ரூம்மேட்டை போய் பொலருன்னு ஒன்னு விடனும் போல தோனுச்சு...ஆனாலும் காந்தி பிறந்த மண்ணில் அடிக்க எல்லாம் கூடாதுனு விட்டுட்டேன்.(நான் ஒரு அஹிம்சாவாதி)...
சரி கட் அடிச்சிட்டு படத்திற்கு போயிருக்கனே அப்படியாவது வீரம் இருக்கே(கட் அடிப்பதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்காத ஒரு student number 1 நான்)னு பாத்தா வீட்ல அம்மாகிட்ட பெர்மிஷன் வாங்கிட்டுத்தான் தலைவரு போவாராம்.
நண்பன் பண்ற காமெடியை வச்சுக்கிட்டு சர்தார்ஜி ஜோக் மாதிரி இவன் பேர்ல ஜோக் எழுதலாம்.இப்படி பட்ட ஒருத்தன நண்பனா வச்சுக்கிட்டு 5 star ஹொட்டலா ஆரம்பிக்கமுடியும்... அதான் இப்படி ஒரு பிளாக் ஆரம்பிச்சிருக்கேன்...

Subscribe to:
Posts (Atom)